இன்றைய புனிதர் ஜூலை 28 புனித அல்ஃபோன்சா (St. Alphonsa Muttathupadathu)
இந்தியாவின் முதல் கத்தோலிக்க புனிதர்
இந்தியாவின் முதல் கத்தோலிக்க புனிதர்
பிறப்பு : 19 ஆகஸ்ட், 1910 குடமளூர், பாளை, கேரளம், இந்தியா.
இறப்பு : 28 ஜூலை, 1946 (அகவை 35) பரனாங்கானம், பாளை, கேரளம், இந்தியா.
அருளாளர் பட்டம் : ஃபெப்ரவரி 8, 1986 கோட்டயம் - திருத்தந்தை இரண்டாம் சின்னப்பர்
புனிதர் பட்டம் : அக்டோபர் 12, 2008 வத்திக்கான் நகர் - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
நினைவுத் திருநாள் : ஜூலை 28
முக்கிய திருத்தலங்கள் : புனித அல்ஃபோன்சமா தேவாலயம், கேரளம்
St. Mary's Syro-Malabar Church, Bharananganam, Kerala, India
புனித அல்ஃபோன்சா இந்தியாவின் முதல் புனிதர் ஆவார்.
அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த குடமலூர் எனும் ஊரில் (தற்போதைய கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்) 1910ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் நாள் ஜோசஃப் மற்றும் மேரி இணையருக்கு மகளாய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்குப் புனித அன்னாவின் நினைவாக அன்னக்குட்டி என்றுப் பெயரிட்டனர்.
St. Alphonsa Young Stage Image
அன்னா இளம் வயதில் விளையாடினாரோ இல்லையோ, விதி அவர் வாழ்வில் விளையாடத் தவறவில்லை. அன்னாவின் இளம் வயதிலேயே அவரின் தாயார் இறந்து விட்டார். தாயில்லாக் குழந்தையான அன்னாவை அவரின் அத்தைதான் வளர்த்தெடுத்தார். பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார்.
1923ம் ஆண்டு எரியும் நெருப்புக் குழிக்குள் தவறி விழுந்த அன்னாவின் பாதங்கள் கருகின. இவ்விபத்து வாழ்நாள் முழுமைக்கும் இவரை இயலாமையில் ஆழ்த்தியது. பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
Muséum of st alphonsa, St. Mary's Syro- Church, Bharananganam, Kerala, India
தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1928ம் ஆண்டில் அல்ஃபோன்சா எனும் பெயரைத் தாங்கி கன்னியாஸ்திரீயாக மாறினார். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்தார். எனினும் உடல்நலக் குறைவால் இவரால் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்ய முடியவில்லை.
Muséum of st alphonsa, St. Mary's Syro- Church, Bharananganam, Kerala, India
கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி, மேலும் பலவீனமடைந்து, படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35 வயதில் 1946ம் ஆண்டு ஜூலை 28ம் நாள் கன்னியாத்திரி அல்போன்சா மரணம் அடைந்தார்.
இவரது உடல் பரனாங்கானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் இந்த இடம் நம்பிக்கை உள்ளம் கொண்ட பக்தர்கள் பலர் வந்து செல்லும் புனிதத் தலமாய் விளங்குகிறது. இங்கு வரும் பலர் அன்னை அல்ஃபோன்சா தங்கள் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்திய விதத்தைக் கூறுகின்றனர்.
Tomb of st.Alphonsa, St. Mary's Syro-Malabar Church, Bharananganam, India
இவ்வாறாக 1999ல் ஒரு பச்சிளங்குழந்தையின் வளைந்த பாதங்கள் (club foot) குணப்படுத்தப்பட்டதாய்க் கூறப்படும் நிகழ்வே அல்ஃபோன்சா அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்குதற்கு காரணமாய் அமைந்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985ம் ஆண்டு அப்போதையை திருத்தந்தை 2ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.
Tomb of st St.Aalphonsa, St. Mary's Syro Church, Bharananganam, Kerala, India
அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று திருத்தந்தை 16வது பெனடிக்ட் அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ம் தேதி 2008ம் வருடம் அருளாளர் அல்போன்சாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். புனிதர் பட்டத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டு கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) கழிந்த பின்னர் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது குறிக்கத்தக்கது.
Subash
(h)
ReplyDelete