Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (ஏப்ரல் 13) ✠ புனிதர் முதலாம் மார்ட்டின் ✠ (St. Martin I)
Author: Subash
Rating 5 of 5 Des:
†  இன்றைய   புனிதர்  † ( ஏப்ரல்  13)  ✠   புனிதர்   முதலாம்   மார்ட்டின்   ✠  (St. Martin I) 74 வது   திருத்தந்தை /  மறைசாட்சி  :...
† இன்றைய புனிதர் † (ஏப்ரல் 13)  புனிதர் முதலாம் மார்ட்டின்  (St. Martin I)

74வது திருத்தந்தைமறைசாட்சி : (74th Pope and Martyr)
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
பிறப்பு : ஜூன் 21, 598 டோடிஉம்பிரியாபைஸண்டைன் பேரரசு (Todi, Umbria, Byzantine Empire)
இறப்பு : செப்டம்பர் 16, 655  செர்சொன்பைஸண்டைன் பேரரசு (Cherson, Byzantine Empire)

திருத்தந்தை முதலாம் மார்ட்டின்கத்தோலிக்க திருச்சபையின் 74வது திருத்தந்தையாக 649ம் ஆண்டுஜூலை மாதம், 21ம் தேதிமுதல் 655ம் ஆண்டில் தனது இறப்புவரை ஆட்சி செய்தவர் ஆவார்.

இவர், “பைஸண்டைன் பேரரசின்” (Byzantine Empire) “ஊம்ப்ரியா” (Umbria) மாகாணத்திலுள்ள “டோடி” (Todi) எனும் நகரில் பிறந்தார். “திருத்தந்தை முதலாம் தியடோருக்குப்” (Pope Theodore I) பிறகு, 649ம் ஆண்டுஜூலை மாதம்ஐந்தாம் நாளன்று இவர் திருத்தந்தையானார்பைஸன்டைன் (Byzantine Papacy) திருத்தந்தை ஆட்சி காலத்தின்போதுஅப்போதைய "காண்ஸ்டன்டினோபில்" (Constantinople) அரசரிடம் ஒப்புதல் பெறாமல் திருத்தந்தையானவர் இவர் ஒருவரேஇவரை "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II) நாடுகடத்தினார்இவர் “தென்கிரீமியா” (Southern Crimea) மாகாணத்திலுள்ள “செர்சொன்” (Cherson) எனுமிடத்தில் இறந்தார்இவரை மறைசாட்சியாகவும்புனிதராகவும் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் ஏற்கின்றன.
இவர் திருத்தந்தையான பின்புமுதல் வேலையாக “மொனொதிலிடிசம்” (Monothelitism) என்னும் கொள்கையினைக் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, 649ம் ஆண்டு, “இலாத்தரன்” பொதுச் சங்கத்தினை (Lateran Council of 649) கூட்டினார்இலாத்தரன் யோவான் பேராலயத்தில் (Church of St. John Lateran) கூடிய இக்கூட்டத்தில் 105 ஆயர்கள் கலந்து கொண்டனர்இது ஐந்து அமர்வுகளில் 5 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 649ம் ஆண்டுவரை நடந்ததுஇதில் 20 சட்டங்கள் வெளியிடப்பட்டனஅவை மொனொதிலிடிசம் கொள்கையினை திரிபுக்கொள்கை என அறிக்கையிட்டது.

மார்ட்டின் இச்சங்கத்தின் முடிவுகளை சுற்றுமடலாக வெளியிட்டார்இத்திரிபுக் கொள்கையினரான "பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ்" (Emperor Constans II), இவரை கைது செய்ய ஆணையிட்டார். 653ம் ஆண்டுஜூன் மாதம், 17ம் நாளன்றுகைது செய்யப்பட்டுஅதே ஆண்டுசெப்டம்பர் மாதம், 17ம் நாளன்றுகாண்ஸ்டன்டினோபிளுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்அங்கிருந்து பைசாந்தியப் பேரரசின் செர்சனுக்கு (தற்போதைய கிரிமியாநாடு கடத்தப்பட்ட்டார்கி.பி. 655ம் ஆண்டுமே மாதம், 15ம் நாளன்றுஅங்கு வந்த அவர்அதே ஆண்டுசெப்டம்பர் மாதம், 16ம் நாளன்று உயிர் நீத்தார்.
இவர் மறைசாட்சியாக மரித்த திருத்தந்தையர்களில் கடைசியானவர்காலங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயிரைக் கொடுத்து பாதுகாத்தவர்.
காண்ஸ்டன்டினோபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதுபாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார்அந்நாட்களில்திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது.
                                           Roma – Basilica di San Martino ai Monti Exterior
"கிறிஸ்துவிடம் இரு தன்மையா - அல்லது ஒரு தன்மை உண்டா" - என்ற வாதம் எழுந்ததுகிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண்டாம் கான்ஸ்டான்ஸ் அரசன்இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய்தான்இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649ல் ரோமில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டினார்இச்சங்கத்தின் முடிவில்கிறிஸ்துவில் இரண்டு தன்மைகள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.
இதன் விளைவாகமார்ட்டின் கான்ஸ்டைன்ஸ் மன்னரால் 653ல் கைதியாக கெர்சோன் என்ற இடத்தில் சிறைப்படுத்தப்பட்டார்திருத்தந்தைக்குரிய அடையாளங்கள் அனைத்தையும் அரசன் வெளிப்படையாகவே பறித்துக் கொண்டான்.

                      Roma – Basilica di San Martino ai Monti Interior 
திருத்தந்தை பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுபட்டினியாக விடப்பட்டார். "எனக்கு அறிமுகமானவர்கள் கூட எனது இடுக்கண் வேளையில் என்னை மறந்துவிட்டனர்நான் இன்னும் உயிரோடிருக்கிறேனாசெத்து மடிந்துவிட்டேனா என்று பார்க்கக்கூட யாருமில்லைஇருப்பினும் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்று விரும்பும் எல்லாம் வல்ல கடவுள்புனித பேதுருவின் வேண்டுதலால் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க அருள்புரிவாராகஎன்று திருத்தந்தை மார்ட்டின் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்இறுதியாககிரிமியாத் தீவில் உள்ள செர்சொனுக்கு நாடுகடத்தப்பட்ட இவர்கி.பி. 655ம் ஆண்டுசெப்டம்பர் மாதம், 16ம் நாளன்றுஇறந்தார்.
                        Roma – Basilica di San Martino ai Monti Interior 
† ஜெபம்:
புனிதர் முதலாம் மார்ட்டினேமறைசாட்சியாக மரித்த திருத்தந்தையர்களில் கடைசியானவரேஇயேசு கிறிஸ்துவில் இரு தன்மைகள் உள்ளன என்ற கோட்பாட்டில் ஆணிதரமாய் இருந்து விசுவாத்திற்கு எதிரான சாத்தானின் திரிபு கொள்கையை உடைத்தெரிந்தவரேஎல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்ற கடவுளின் விருப்பம் நிறைவேறநாங்கள் அனைவரும் தளரா கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டி இறைவனிடம் எங்களுக்காக தொடர்ந்து மன்றாடுவீராக
ஆமென்

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top