Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ( ஏப்ரல் 20 ) புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் St. Hildegund Schoenau
Author: Subash
Rating 5 of 5 Des:
இன்றைய   புனிதர்    (  ஏப்ரல்  20 )    புனித   ஹில்டேகுண்ட்   ஷொய்னவ்   St. Hildegund Schoenau  பிறப்பு  : 1170  கொலோன்  (Cologne) இறப்ப...
இன்றைய புனிதர்  ஏப்ரல் 20 )  புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் St. Hildegund Schoenau பிறப்பு : 1170 கொலோன் (Cologne)
இறப்பு : 20 ஏப்ரல் 1188  ஷொய்னவ் (Schoenau)
நினைவுத் திருநாள் : ஏப்ரல் 20
புனித ஹில்டேகுண்ட், 1170ம் ஆண்டு கொலோன் மறைமாவட்டத்தில் பிறந்தார்இவருக்கு 12 வயது இருக்கும்போதுதன் தந்தையுடன் புண்ணிய பூமிக்கு (Holy Land) திருயாத்திரை சென்றார்கப்பலில் பயணம் செய்யும்போதுஇவரின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டார்இதனால் ஹில்டேகுண்ட் புனித பயணத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது
அப்போதுஅவரின் தந்தை ஹில்டேகுண்ட்- அழைத்துதனக்கு நல்ல உடையுடுத்திதன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக சொன்னார்அதோடுஹில்டேகுண்ட்-இன் பெயரை யோசேப்பு என்று மாற்றச் சொன்னார்ஆனால் ஹில்டேகுண்டால் தன் தந்தையின் ஆசையை கப்பலில் நிறைவேற்ற முடியாமல் போனது
கப்பல் எருசலேமை அடைந்தது.
அப்போது ஹில்டேகுண்ட் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்தில் செபவழிபாடு வைத்து செபித்தார்ஆலயத்தை விட்டு ஹில்டேகுண்டும்அவரின் தந்தையும் வெளியே வந்தபோதுயாரென்று அடையாளம் தெரியாத ஒருவர்இவர்களுக்கு ஆடையையும் இன்னும் அங்கு தங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துஉடன் அழைத்துச் செல்ல காத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தந்தையும்ஹில்டேகுண்ட்டும் அம்மனிதரோடு சென்றனர்முன்பின் தெரியாத அம்மனிதரின் உதவியால் தன் தந்தையின் நோய் குணமாக்கப்பட்டுசில ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினர்.
அதன்பிறகு ஹில்டேகுண்ட் பல காரணங்களால் துறவியாக வேண்டுமென்று விரும்பினார்தன் தந்தையின் அனுமதி பெற்று 1187ம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலுள்ள ஹைடல்பெர்க் –இல் (Heidelberg) இருந்த சிஸ்டர்சியன் துறவற சபையில் (Cistercian) சேர்ந்தார்
அவர் துறவியாவதற்கு முன்பயிற்சி பெறுவதற்காக ஷொய்னவ்விலிருந்த பயிற்சி இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
அப்போது அவர் நவதுறவகத்தில் இருக்கும்போது "யோசேப்புஎன்னும் பெயர்மாற்றம் பெற்றுபுதிய துறவற உடையும் பெற்றுக்கொண்டார்யோசேப்பு நவதுறவகத்தில் இருக்கும்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்அப்போது அவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார்அதன்பிறகு நோய் முற்றிப்போனதால்உயிரை காப்பாற்ற முடியாமல்நவதுறவகத்திலேயே 1188ம் ஆண்டு ஏப்ரல் 20ம் நாள் இறந்தார்.
சிஸ்டர்சியன் துறவற சபையில் நவதுறவகத்தில் இறந்தவர்களில் இவரே முதலானவர்இவரின் ஆன்மீக வாழ்வு இன்று வரை சிஸ்டர்சியன் சபையில் பயிற்சியகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் முன்மாதிரியாக உள்ளது.
செபம் :
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா
துறவிகளாக தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுபயிற்சி இல்லத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இளம் உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும்ஆன்ம சரீர நலன்களை பெற்றுஉம் பாதையை தொடர வரமருளும்!
ஆமென் †

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top