Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ( ஏப்ரல் 25 ) புனிதர் மாற்கு St. Mark
Author: Subash
Rating 5 of 5 Des:
இன்றைய   புனிதர்  (  ஏப்ரல்  25 )  புனிதர்   மாற்கு    St. Mark  நற்செய்தியாளர் ,  மறைசாட்சி  :  பிறப்பு  : 1 ம்   நூற்றாண்டு  ( கி . ...
இன்றைய புனிதர் ( ஏப்ரல் 25 ) புனிதர் மாற்கு  St. Mark 
நற்செய்தியாளர்மறைசாட்சி : பிறப்பு : 1ம் நூற்றாண்டு (கிபிகாப்டிக் மரபுப்படி ஆப்ரிக்காவில் உள்ள இலிபியாவில்
இறப்பு : தகவல் இல்லை
நினைவுத் திருவிழா : ஏப்ரல் 25
சித்தரிக்கப்படும் வகை :பாலைவனத்தில் சிங்கம்சிங்கங்கள் சூழ்ந்த அறியணையில் ஆயர் உடையில்வெனிசு நகரின் மாலுமிகளைக் காப்பது போல; "pax tibi Marce" என்னும் எழுத்துக்களை தாங்கிய புத்தகத்தோடுஇரு இரக்கைகள் உடைய சிங்கம்;
பாதுகாவல் : பார் அட் லா (Bar at Law), வெனிசுஎகிப்துமற்றும் பல
நற்செய்தியாளரான புனித மாற்குபாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார்மேலும் இவர் இயேசுவின் எழுபது சீடர்கலுள் ஒருவராகவும்கிறிஸ்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிறுவனராகவும் கருதப்படுகின்றார்.
                                                        St Mark's Square, Venice, Italy
வரலாற்றாசிரியரான யுசிபசின் (Eccl. Hist. 2.24.1) படிமாற்கு அனனியாசு என்பவருக்குப் பின்புநீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார்பாரம்பரியப்படி கி.பி 68ல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.
மாற்கு நற்செய்தி 14:51-52ல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்ட பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபுஇயேசுவை கைது செய்தவர்கள் இவரைப் பிடித்தபோதுதம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.
கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25ல் கொண்டாடப்படுகின்றதுஇவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.
                          St Mark's Square, Venice, Italy
திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும்புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே.புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே.
இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர்திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர்.மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர்.பேதுருடைய சீடரும்அவருடைய மொழி பெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர்.எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார்எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும்புதுக் கிறிஸ்தவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும்இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய்.முதன் முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும் போது இவரை உடன் அழைத்துச் சென்றார்
                                                   St Mark's Square, Venice, Italy
அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோதுமாற்கு அவர்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று அச்சம் கொண்ட பவுல்சிலிசியாசிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோதுபர்ணபாஸ் பரிந்துரைத்ததால்பவுல் மாற்கை அழைத்து செல்லவில்லைஇதனால் பர்ணபாவும் பவுலை விட்டுப் பிரிந்தார்.
உரோமை நகரில் பவுல் சிறைப் படுத்தப்பட்டிருந்த போதுமாற்கு பவுலுக்கு உதவி செய்தார்பவுல்தான் இறக்கும்முன்புஉரோமை சிறையில் இருந்தார்அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.
பின்னர் மாற்குபுனித பேதுருவின் நண்பனானார்அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட்இரனேயுஸ்பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள்.
                                                   St Mark's Square, Venice, Italy
மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார்.இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர் இதே மாற்குதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர்.
பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்குஎன்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மாற்குஅலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர்இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார்இவரது உடல் 830ம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றதுமாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றப்படுகின்றார்.
சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார்எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர்.
                                           Tomb of St Mark's Square, Venice, Italy
நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தாஎன்ற சொல் இவருக்கே உரியதுபுதிதாக மனந்திரும்பிய உரோமைப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டதுமாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம்என்று வரலாறு கூறுகின்றது.
ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள்கோப்த்துபிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.
செபம் :அன்பே உருவான எங்கள் மீட்பரேஇறைவா!புனித மாற்கு நற்செய்தியை எழுதிஉம்மை பற்றி இம்மண்ணிலுள்ள மக்களுக்கு அறிவித்தார்.புனித மாற்கு நற்செய்தியினை நாங்களும்எங்களின் வாழ்க்கையில் ஏற்றுவார்த்தையை வாழ்வாக்கிட உம் அருள்தாரும்ஆமென் †

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top