Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (Saint of the Day) (மார்ச்/ March 1) ✠ புனிதர் டேவிட் ✠ (St. David of Wales)
Author: Subash
Rating 5 of 5 Des:
†  இன்றைய புனிதர்  † (Saint of the Day) ( மார்ச்/  March 1) ✠   புனிதர் டேவிட்  ✠  (St. David of Wales) ஆயர் :  (Bishop) பிறப்பு :...
† இன்றைய புனிதர் † (Saint of the Day) (மார்ச்/ March 1)
 புனிதர் டேவிட் ✠ (St. David of Wales)
ஆயர் : (Bishop)
பிறப்பு : கி.பி. சுமார் 500 கேர்ஃபைபெம்ப்ரோகெஷைர்வேல்ஸ் 
(Caerfai, Pembrokeshire, Wales)
இறப்பு : மார்ச் 589 செயின்ட் டேவிட்'ஸ்பெம்ப்ரோகெஷைர்வேல்ஸ்
(St David's, Pembrokeshire, Wales)
முக்கிய திருத்தலங்கள் :
புனிதர் டேவிட் பேராலயம்பெம்ப்ரோகெஷைர்வேல்ஸ்
(St. David's Cathedral, Pembrokeshire, Wales)
நினைவுத் திருநாள் : மார்ச்
பாதுகாவல் :
வேல்ஸ் (Wales) பெம்ப்ரோகேஷைர் (Pembrokeshire) 
புலால் உண்ணாதவர்கள் (Vegetarians) கவிஞர்கள் (Poets)
வேல்ஸ் மாநில புனிதர் டேவிட்ஆறாம் நூற்றாண்டின் "மினிவ்" (Mynyw) மறை மாவட்டத்தின் ஆயர் ஆவார். இவர் வேல்ஸ் மாநிலத்தின் பாதுகாவலரும் ஆவார்.
பிரிட்டிஷ் நாட்டின் புனிதர்களில் மிகவும் பிரபலமான இவரது தந்தை புனித நான்’ (Saint Non) ஆவார். 'செரேடிகியோன்' (Ceredigion) நாட்டின் அரசனான செரேடிக் அப் குநேட்டா’ (Ceredig ap Cunedda) என்பவரின் பேரன் என்றும் இவர் அறியப்படுகிறார்.
மத குருவாக அருட்பொழிவு பெற்ற இவர்மறை போதனை செய்வதில் வல்லவராக இருந்தார். இவர் துறவற மடங்கள் பலவற்றை நிறுவினார். தமது தலைமை துறவற மடத்தினை 'வேல்ஸ்மாநிலத்தின் தென்மேற்குப் (Southwestern Wales) பிராந்தியத்தில் நிறுவினார். அவரது அன்றாட வாழ்க்கையின் ஒழுங்கு முறைகள் மிகவும் கடினமானதாயும் தீவிரமானதாகவும் இருந்தன என்பர். அவர் தமது அன்றாட உணவை தினமும் நகருக்குள் சென்று பிச்சை எடுத்தே உண்டார். அதன் பொருட்டுகைவண்டியை எருதுகளின் அல்லது குதிரைகளின் உதவியின்றி தாமே இழுத்துச் செல்வார். மிகவும் சாதாரணமாகஉப்பு மட்டுமே சேர்க்கப்பட்ட ரொட்டியும் நீரும் மட்டுமே அருந்தினார். புலால் உண்பதை கண்டிப்பாக தவிர்த்தார். மாலை வேளைகளில் செபிப்பதுவும் புத்தகங்களைப் படிக்கவும் எழுதவுமே செய்தார்.. தமக்காக எந்தவொரு பொருளையும் வைத்துக்கொள்ளவில்லை. "என்னுடைய புத்தகம்" என்று சொல்வதைக்கூட குற்றமாக கருதினார். தமது துறவற மடங்களில் தங்கியிருந்து தம்மைப் பின்பற்றிய துறவியரும் அவரைப்போன்றே கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார்.
டேவிட் ஒருமுறை, "ல்லன்டேவி" (Llanddewi) என்றோர் கிராமத்திலே பெரும் மக்கள் மற்றும் துறவியர் கூட்டத்தினரிடையே மறை போதனை செய்து கொண்டிருந்த போதுஅவர் நின்றிருந்த பூமிஒரு குன்று போல் உயர்ந்ததாகவும்ஒரு வெண்புறா அவரது தோளில் வந்தமர்ந்ததாகவும் கூறுகிறார்கள். இதுடேவிடின் துறவு வாழ்க்கையில் நடந்த பெரும் அதிசயங்களில் ஒன்று என கூறப்படுகின்றது.
இவர் மரித்ததுஒரு மார்ச் மாதம் ஒன்றாம் தேதிசெவ்வாய்க் கிழமை என்று கூறப்படுகிறது. வேல்ஸ் மாநிலத்தின் தென் பிராந்தியத்தில் ஐம்பது தேவாலயங்கள் புனிதர் டேவிட் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்து அவரது ஆன்மாவைப் பெற்றுக்கொண்டதன் மூலம்குருமடம் சம்மனசுக்களால் நிரம்பப்பட்டதாக கூறப்படுகிறது.


About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top