Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: இன்றைய புனிதர் ஜூலை 1 புனிதர் ஜூனிபெரோ செர்ரா (St. Junípero Serra)
Author: Subash
Rating 5 of 5 Des:
இன்றைய புனிதர் ஜூலை 1  புனிதர் ஜூனிபெரோ செர்ரா  (St. Junípero Serra) கலிஃபோர்னியாவின் அப்போஸ்தலர்/ கத்தோலிக்க குரு/ மறைப்பணியாளர் : (A...
இன்றைய புனிதர் ஜூலை 1 புனிதர் ஜூனிபெரோ செர்ரா (St. Junípero Serra)
கலிஃபோர்னியாவின் அப்போஸ்தலர்/ கத்தோலிக்க குரு/ மறைப்பணியாளர் :
(Apostle of California/ Catholic Priest/ Religious/ Missionary)
பிறப்பு : நவம்பர் 24, 1713 பெட்ரா, மஜோர்கா, ஸ்பெயின் (Petra, Majorca, Spain)
இறப்பு : ஆகஸ்ட் 28, 1784 கலிஃபோர்னியா, புதிய ஸ்பெயின், ஸ்பேனிஷ் அரசு
(Mission San Carlos Borromeo de Carmelo, Las Californias, New Spain, Spanish Empire)
புனிதர் பட்டம் : செப்டம்பர் 23, 2015 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis)
முக்கிய திருத்தலங்கள் : பொர்ரோமியோவின் கார்மேல் மலை மறைப்பணியகம், கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Mission San Carlos Borromeo de Carmelo, Carmel-by-the-Sea, California, United States)
புனிதர் “ஜூனிபெரோ செர்ரா ஒய் ஃபெர்ரேர்” (Junípero Serra y Ferrer), ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க குருவும் (Roman Catholic Spanish priest), ஃஃபிரான்சிஸ்கன் சபையின் துறவியும் (Friar of the Franciscan Order), “பஜா கலிஃபோர்னியாவில்” (Baja California) ஒரு மறைப்பணி சமூகத்தை நிறுவியவரும், கலிஃபோர்னியாவின் மொத்தமுள்ள 21 மறைபணி சமூகங்களில் முதல் ஒன்பதை நிறுவியவருமாவார். இவருக்கு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால், 1988ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 25ம் நாளன்று, முக்திபேறு பட்டம் அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் நாளன்று, இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.
ஆரம்ப வாழ்க்கை :
“மிகுவேல் ஜோசெப் செர்ரா ஐ ஃபெர்ரார்” (Miquel Josep Serra i Ferrer) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் நாட்டின் கடலோர தீவான “மஜோர்காவின்” (Majorca) “பெட்ரா” (Petra) எனும் கிராமத்தில் 1713ம் ஆண்டு, நவம்பர் மாதம், 24ம் தேதி, பிறந்தவர் ஆவார். செர்ரா’வின் தந்தை பெயர், “ஆன்டோனியோ நடல் செர்ரா” (Antonio Nadal Serra) ஆகும். தாயாரின் பெயர் “மார்கரிட்டா ரோஸா செர்ரேர்” (Margarita Rosa Ferrer) ஆகும். இவர் பிறந்த சில மணி நேரத்திலேயே இவருக்கு கிராமத்து தேவாலயத்தில் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. இவர் தமது பெற்றோருக்கு பிறந்த மூன்றாவது குழந்தை ஆவார். முதல் இருவரும் குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போயினர். இவர்க மஜோர்கா தீவின் மொழியான “கேடலன்” (Catalan) பேசினர். இதுவே இவர்களது தாய்மொழியாகும். செர்ரா, “கேஸ்டிலன் ஸ்பேனிஷ்: (Castilian Spanish) மொழியை இரண்டாம் மொழியாக கற்றுக்கொண்டார்.
ஏழு வயதான செர்ரா வயல்வெளிகளில் பணி புரிந்தார். கோதுமை, பீன்ஸ் ஆகியன அறுவடை செய்வதிலும், கால்நடைகளை மேய்ப்பதிலும் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். ஆனால், உள்ளூரிலிருந்த ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்திற்கு அடிக்கடி செல்வதில் விசேஷ ஆர்வம் காட்டினார். துறவியர் நடத்திய ஆரம்ப பள்ளியில் சேர்ந்து வாசித்தல், எழுதுதல், கணிதம், இலத்தீன் மொழி, மதம் மற்றும் வழிபாட்டுப் பாடல், குறிப்பாக கிரகோரியன் மந்திரம் ஆகியன கற்றார். இயற்கையாகவே இவருக்கு குரல்வளம் நன்றாக இருந்தது. துறவியர் இவரை பாடல் குழுவினருடன் இணைந்து பாடவும் அனுமதித்தனர்.
இவரது 15 வயதில் பெற்றோர் இவரை தலைநகரான “பல்மா டி மஜோர்கா’விலுள்ள” (Palma de Majorca) ஃபிரான்சிஸ்கன் பள்ளியில் சேர்த்து விட்டனர். அங்கே அவர் தத்துவயியல் கற்றார். சரியாக ஒரு வருடம் கழித்து அவர் ஃபிரான்சிஸ்கன் சபையின் புகுநிலை துறவியாக இணைந்தார்.
செர்ரா, 35 வயது வரை வகுப்பறைகளிலேயே தமது காலத்தை கழித்தார். ஆரம்பத்தில் இறையியல் மாணவராகவும், பின்னர் பேராசிரியராகவும். இவர் பிரசங்கிப்பதிலும் புகழ் பெற்றவராக இருந்தார். ஆனால் அனைத்தையும் ஒருநாள் விட்டுவிட்டார். அவரது விருப்பம், உள்ளூர் மக்களை புதியதோர் உலகிற்கு மனமாற்றம் செய்வதேயாம். பல வருடங்களுக்கு முன்னர், தென் அமெரிக்காவில் “புனித ஃபிரான்சிஸ் சொலானோ’வின்” (Saint Francis Solano) மறை பணிகளைப் பற்றி கேள்வியுற்றிருந்தார். அதுபோலவே தாமும் மறை பணியாற்ற விரும்பினார்.
கடல் பயணமாக கப்பலில் பயணித்து “மெக்ஸிகோ நாட்டின் வெரா” (Vera Cruz, Mexico) துறைமுகம் வந்தடைந்தார். மெக்ஸிகோ நகர் செல்வதற்காக துணைவர் ஒருவருடன் 250 மைல் தூரம் நடந்தார். வழியில், அவரது இடது காலில் ஏதோ ஒரு பூச்சி கடியால் பாதிக்கப்பட்டார். குணமாகாமலேயே போன அந்த பூச்சிக்கடி மீதமுள்ள அவருடைய வாழ்நாள் முழுதும் சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தாகவும் இருந்திருக்கிறது. பதினெட்டு வருடங்கள் “மத்திய மெக்ஸிகோ” (Central Mexico) நாட்டிலும் “பஜா தீபகற்பத்திலும்” (Baja Peninsula) பணியாற்றினார். அங்கே, மறைப்பணிகளின் தலைவராக ஆனார்.
    Mission San Carlos Borromeo de Carmelo (Carmel, Las Californias) basilica
அரசியல் பிரவேசம் :
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மிகப் பெரிய மாநிலமான “அலாஸ்காவில்” (Alaska) இருந்து ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தல் இருந்தது. ஒரு பிராந்தியத்தில் ரஷ்யாவைத் தாக்க ஒரு பயணத்தை மேற்கொள்ளுமாறு ஸ்பெயின் நாட்டின் அரசன் “மூன்றாம் சார்ள்ஸ்” (Charles III of Spain) உத்தரவிட்டார். இராணுவத்திலிருந்து ஒன்றும் ஆன்மீகத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு வெற்றியாளர்கள் தமது தேடலைத் தொடங்கினர். “ஜோஸ் டி கல்வெஸ்” (José de Galvez) செர்ராவை தற்போதைய “மாண்டேரே கலிஃபோர்னியாவில்” (Monterey, California) தம்முடனிருக்க அறிவுறுத்தினார். 1769ம் ஆண்டு, வடக்கே 900 மைல் தூரம் பயணித்த பிறகு “சேன் டியெகோ” (San Diego) மாநிலத்தில் முதல் மறைப்பணியை தொடங்கினார். அந்த வருடம் உணவுப் பொருட்களின் பற்றாகுறையால் கிட்டத்தட்ட பயணம் ரத்தானது. உள்ளூர் மக்களுடன் தங்குவதற்காண உறுதிமொழியாக, செர்ரா தமது இணை துறவி ஒருவருடன், புறப்பட திட்டமிட்ட நாளான மார்ச் 19, புனிதர் சூசையப்பர் திருவிழா நாள் தயாரிப்பாக நவநாள் செபம் செய்ய தொடங்கினர். குறிப்பிட்ட தினம் நிவாரண கப்பல் வந்தது.
    Mission San Carlos Borromeo de Carmelo (Carmel, Las Californias) basilica
தொடர்ந்து தொடங்கிய பிற மறை பணிகள் :
“மொண்டேரே/ கார்மேல்” (Monterey/Carmel) (1770); “புனித அன்டோனியோ மற்றும் புனித கேப்ரியல்” (San Antonio and San Gabriel) (1771); “புனித லூயிஸ் ஒபிஸ்போ” (San Luís Obispo) (1772); “புனித ஃபிரான்சிஸ்கோ மற்றும் புனித ஜுவான் கேபிஸ்டிரனோ” (San Francisco and San Juan Capistrano) (1776); “சான்டா கிளாரா” (Santa Clara) (1777); “புனித போவேன்ச்சுரா” (San Buenaventura) (1782). செர்ராவின் மரணத்தின் பின்னர் இன்னும் பன்னிரண்டு மறைப்பணிகள் நிறுவப்பட்டன.
செர்ரா, பெரும் சாதனைகளை மேற்கொள்வதற்காக இராணுவ தலைவருடன் மெக்ஸிகோ நோக்கி மிக நீண்ட பயணம் மேற்கொண்டார். அவர் மரணமடையும் தருவாயில் சென்று சேர்ந்தார். செர்ரா விரும்பிய கணிசமான இதன் பின் விளைவுகள், இந்தியர்களையும் மறைப்பணிகளையும் பாதுகாக்கும் ஒழுங்கு முறையேயாகும். இது, கலிஃபோர்னியாவில் முதல் குறிப்பிடத்தக்க சட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது, இது பூர்வீக அமெரிக்கர்களுக்கான "உரிமைகளுக்கான மசோதா" ஆகும்.
     Tomb of St.Junípero Mission San Carlos Borromeo de Carmelo basilica
அமெரிக்க ஆதிவாசிகள் ஸ்பேனிஷ் பார்வையில் மனிதரல்லாத வாழ்க்கை வாழ்வதால், துறவியர் அவர்களது சட்டபூர்வ பாதுகாவலர்களாக ஆனார்கள்.
செர்ராவின் மறைப்பணி வாழ்க்கை, குளிர் மற்றும் பசிக்கு எதிராகவும், இரக்கமேயற்ற இராணுவ தலைவர்கள் மற்றும், மரண பயம் ஏற்படுத்தும் கிறிஸ்தவர்களற்ற ஆதிவாசிகள் ஆகியோருக்கு எதிராகவும் ஏற்பட்ட நீண்ட யுத்தமாக அமைந்தது. அவரது தணியாத ஆர்வம், தினந்தோறும் இரவு செபத்தினால் – பெருமளவு முழு இரவும் - பூரணமாய் அமைந்தது.
                       Signature of St.Junípero Serra
செர்ரா 6,000க்கும் அதிகமான மக்களுக்கு திருமுழுக்கு அளித்தார். 5,000க்கும் அதிக மக்களுக்கு உறுதிப்பூசுதல் அளித்தார். அவர் கிட்டத்தட்ட உலகையே சுற்றி வந்தார். அவர் பூர்வீக அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையின் பரிசு மட்டுமல்லாது, ஒரு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்டுவந்தார். செர்ரா அவர்களது அன்பை வென்றார், குறிப்பாக அவரது மரணத்தின் போது அவர்களின் துயரத்தால் சாட்சி பெற்றார்
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top