அருட்கன்னி மற்றும் சபை நிறுவனர் : (Virgin and Foundress)
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
பிறப்பு : மார்ச் 2, 1774 வெரோனா, வெனிஸ் குடியரசு (Verona, Republic of Venice)
இறப்பு : ஏப்ரல் 10, 1835 வெரோனா, லொம்பார்டி-வெனிஷியா அரசு, ஆஸ்திரிய பேரரசு
(Verona, Kingdom of Lombardy–Venetia, Austrian Empire)
(Verona, Kingdom of Lombardy–Venetia, Austrian Empire)
முக்திபேறு பட்டம் : டிசம்பர் 7, 1941திருத்தந்தை 12ம் பயஸ் (Pope Pius XII)
புனிதர் பட்டம் : அக்டோபர் 2, 1988 திருத்தந்தை 2ம் ஜான் பால் (Pope John Paul II)
நினைவுத் திருநாள் : ஏப்ரல் 10
புனிதர் மகதலின் கனொஸ்ஸா ஒரு இத்தாலிய அருட்சகோதரியும், சபை நிறுவனரும்ஆவார். இவர் தமது பிராந்தியத்திலுள்ள ஏழை மக்களின் வழக்குரைஞராக பணியாற்றியவர்ஆவார்.
வெனிஸ் குடியரசிலுள்ள வெரோனா (Verona) எனும் இடத்தில் பிறந்த இவரது தந்தை பெயர்“மார்க்கிஸ் ஒக்டோவியோ டி கனோஸ்ஸா” (Marquis Ottavio di Canossa) ஆகும். இவரது தாயார்பெயர் “தெரேசா ஸ்லூஹா” (Teresa Szluha) ஆகும். இவர் பிறந்த மறுதினமே திருமுழுக்குபெற்றார்.
மகதலின் ஐந்து வயதாக இருக்கும்போது அவரின்தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இரண்டுவருடங்களின் பிறகு, இவரது தாய் மறுமணம்செய்துகொள்வதற்காக தமது ஐந்து குழந்தைகளையும்விட்டு பிரிந்து 'மான்ட்டுவா' (Mantua) எனும் இடத்திற்குசென்றார். இதன் காரணமாக, குழந்தைகள் அனைவரும்அவர்களது மாமனது பாதுகாப்பில் வளர்ந்தனர்.
தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கியமகதலின் குழந்தையாக இருந்த போதே துறவியாகவேண்டுமென்று ஆசைப்பட்டார். 1791ம் ஆண்டு,மகதலின் தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்குசென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். கார்மேல்மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்குமகதலின் கார்மேல் மட கன்னியர்களால்வளர்க்கப்பட்டார். மகதலின் கார்மேல் துறவியர்இல்லத்தில் தமது நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவறபயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ட்ரேவிசோ (Treviso)என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால்அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். பின்னர், தமதுகுடும்ப சொத்தான பெரும் தோட்டங்களை நிர்வகிக்க தொடங்கினார்.
வெரோனாவில் உள்ள ஏழைகள் மகதலின் கவனத்தை ஈர்த்தனர். அவர்கள் ஃபிரெஞ்ச் புரட்சிஇராணுவ படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை, மகதலினாவைஅவர்களுக்காக சேவை செய்யும் மனதை தந்தது.
கி.பி. 1808ம் ஆண்டு, கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி,உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்த ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தைநடத்தினார். இதன் பயனாக 1808ம் ஆண்டு, “கருணையின் மகள்கள்”, "ஏழைகளின்சேவகர்கள்" (Congregation of the Daughters of Charity, Servants of the Poor) என்ற சபையை நிறுவினார்.
Relic of St. Magdalen of Canoss
பிறகு கி.பி. 1810 மற்றும் கி.பி. 1812ம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருக்குழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், கி.பி. 1816ம் ஆண்டு மிலானிலுள்ளபெர்கமோவிலும் (Bergamo) சபைகளை நிறுவினார்.
கி.பி. 1828ம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபைதிருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகுஇச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என பலநாடுகளில் பரவியது.
மகதலின் கி.பி. 1835ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் நாள் வெரோனாவில் மரித்தார்.
கி.பி. 1941ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் முக்திபேறு பட்டம்கொடுக்கப்பட்டது.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், கி.பி. 1988ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இரண்டாம்நாள், புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.
Post a Comment Blogger Facebook