Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (ஏப்ரல் 9) ✠ புனிதர் கஸில்டா ✠ (St. Casilda of Toledo)
Author: Subash
Rating 5 of 5 Des:
          †  இன்றைய   புனிதர்  † ( ஏப்ரல்  9)  ✠   புனிதர்   கஸில்டா   ✠  (St. Casilda of Toledo) இறப்பு  :  கி . பி . 1050 ஏற்கும் ...
         † இன்றைய புனிதர் † (ஏப்ரல் 9)  புனிதர் கஸில்டா ✠ (St. Casilda of Toledo)
இறப்பு : கி.பி. 1050
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
புனிதர் கஸில்டாரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார்.
கஸில்டாபத்தாம் நூற்றாண்டில்ஸ்பெயின் (Spain) நாட்டின் “டோலேடோ” (Toledo) மாகாணத்தின் இஸ்லாமிய மத தலைவர் ஒருவரது மகளாகப் பிறந்தவர் ஆவார்.
இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட கஸில்டாகிறிஸ்தவ கைதிகளின் மீது மிகுந்த இரக்கம் காட்டினார்தமது இஸ்லாமிய மதத்தின்மீது விசுவாசம் கொண்டிருந்த இவர்தினந்தோறும் கிறிஸ்தவ கைதிகளுக்கு ரொட்டிகளை மறைவாகக் கொண்டுவந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்ஒருநாள் அவர் கிறிஸ்தவ கைதிகளுக்கு கொடுப்பதற்காக ரொட்டிகளை தமது ஆடையில் மறைத்து எடுத்துச் செல்கையில்எதிர்ப்பட்ட இஸ்லாமிய போர் வீரர்களால் சோதனையிடப்பட்டார்அவர்கள் அவரை சோதித்தபோதுஅவரது ஆடையில் மறைவாக வைக்கப்பட்டிருந்த ரொட்டிகள் அழகிய ரோஜா மலர்களாக மாறினவாம்.
                     View of the Sanctuary of St. Casilda from Outside
கஸில்டா தமது இளம் வயதில் நோய்வாய்ப்பட்டார்உள்ளூர் அரேபிய மருத்துவர்கள் அவரை குணப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாதிருந்ததுஅதனால்அவர் உள்ளூர் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவில்லை.
                    View of the Sanctuary of St. Casilda from inside
வடக்கு ஸ்பெயினிலுள்ள “ஸான் விகென்ஸோ”(SanVicenzo) திருத்தலத்திற்கு புனித பயணம் மேற்கொண்டால் தமது நோய்கள் தம்மை விட்டு விலகும்தாம் குணமடைவோம் என்று கஸில்டா நம்பினார்அவரைப் போலவே நோய்வாய்ப்பட்ட மக்கள் திருத்தல புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்அவர்களில் அநேகர் இரத்த ஒழுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்கஸில்டா “ஸான் விகென்ஸோ” திருத்தலத்தின் புனித நீரை வேண்டி அருந்தினார்அவரை இந்த திருத்தலத்திற்கு இட்டுச் சென்ற சக்தி என்னவென்று இதுவரை யாருமறியார்ஆனால்வியக்கத்தக்க வகையில் அவர் குணமுற்றார்.

The sanctuary in which St. Casilda of Toledo has been laid to rest is in the province of Burgos at near Briviesca by the Salinillas de Bureba.
இதன் பிரதிபலனாககஸில்டா கிறிஸ்தவ மதத்தை மனமார ஏற்றார். “பர்கோஸ்” (Burgos) எனும் இடத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார்தனிமையிலும் தவ வாழ்வினை வாழ்ந்தார்இவர் சுமார் நூறு வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறதுஇவர் கி.பிசுமார் 1050ம் வருடம் இறந்ததாக நம்பப்படுகிறது.
சரித்திரம் முழுதுமேகிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே ஒரு பதட்ட சூழ்நிலையே நிலவி வந்திருக்கிறதுசில வேளைகளில் அவை இரத்தக்களறியான போர்களாகவும் வெடித்திருக்கின்றனகஸில்டா தமது அமைதியானஎளிய வாழ்க்கை மூலம் தம்மைப் படைத்த இறைவனுக்கு - முதலில் ஒரு விசுவாசத்திற்கும் - பின்னர் வேறொன்றுக்குமாக - சேவை செய்திருந்தார்.

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top