Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (ஏப்ரல் 9) ✠ புனிதர் வால்ட்ரூட் ✠ (St. Waltrude)
Author: Subash
Rating 5 of 5 Des:
இறப்பு  :  ஏப்ரல்  9, 688 நினைவுத்   திருநாள்  :  ஏப்ரல்  9 புனிதர்   வால்ட்ரூட் , " மான்ஸ் "  மற்றும்  " பெல்ஜியம் ...
இறப்பு : ஏப்ரல் 9, 688
நினைவுத் திருநாள் : ஏப்ரல் 9
புனிதர் வால்ட்ரூட், "மான்ஸ்மற்றும் "பெல்ஜியம்" (Mons, Belgium) ஆகிய இடங்களின் பாதுகாவலர் ஆவார்.
மிகவும் அழகிய பெண்ணாக வளர்ந்த இவரைபெரும் பணம் படைத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்ஆனால்அவரது பெற்றோர்கள்அவரை, "ஹைனால்ட்" (Count of  Hainault) நகரின் பிரபுவுக்கு மணமுடித்து வைத்தனர்இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனபணி ஓய்வு பெற்ற வால்ட்ரூட்டின் கணவர் அங்கிருந்த ஒரு துறவு மடத்தில் தஞ்சமடைந்தார்.
கி.பி. 656ம் ஆண்டுவால்ட்ரூட் தாமே ஒரு பெண் துறவியானார்அவர் தமது சொந்த பள்ளியை நிறுவினார்அதனைச் சுற்றிலும் "மோன்ஸ்" (Mons) நகரம் வளர்ச்சி காண தொடங்கியிருந்தது.
சிறைக் கைதிகளை விடுதலை செய்விப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்அவர்களை மீட்பதற்காக மீட்பு விலை கொடுக்க வேண்டியிருந்ததுவால்ட்ரூட்தம்மிடமிருந்த வெள்ளிப் பொருட்களை எடை போட்டு விற்றார்கைதிகள் யாவரும் மீட்பு விலை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டனர்பின்னர் அவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்இதுபோன்ற காரணங்களால் வால்ட்ரூட் சரித்திர ஆர்வலர்களால் கொண்டாடப்படுகின்றார்.
                                                    view-church-saint-waltrude-mons-belgium-
கி.பி.  688ம் ஆண்டு ஏப்ரல் 9ம் நாள்வால்ட்ரூட் பெல்ஜியத்திலுள்ள மோன்ஸ் (Mons) நகரில் இறந்தார்பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும்கல்லூரிகளும் உள்ளன.
மோன்ஸ் (Mons) நகரில் இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்றுள்ளதுஒவ்வோர் ஆண்டும் இந்த திருத்தலத்தில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top