Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: † இன்றைய புனிதர் † (SAINT OF THE DAY) ( ஃபெப்ரவரி/ FEBRUARY 12 ) ✠ புனிதர் அபொல்லோனியா ✠(St. Apollonia)
Author: Subash
Rating 5 of 5 Des:
†  இன்றைய   புனிதர்   † (SAINT OF THE DAY) (  ஃபெப்ரவரி /  FEBRUARY 12 ) ✠   புனிதர்   அபொல்லோனியா   ✠ (St. Apollonia) கன்னியர் /  ம...
† இன்றைய புனிதர் † (SAINT OF THE DAY) ( ஃபெப்ரவரிFEBRUARY 12 )
 புனிதர் அபொல்லோனியா (St. Apollonia)
கன்னியர்மறை சாட்சி : (Virgin & Martyr)
பிறப்பு : இரண்டாம் நூற்றாண்டு 
இறப்பு : 249 அலெக்சாண்ட்ரியாஎகிப்து (Alexandria, Egypt)
பாதுகாவல் :  பல் மருத்துவர்கள் (Dentists) பல் சம்பந்தமான பிரச்சினைகள் (Tooth problems)
நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 12
புனிதர் அபொல்லோனியாஅலெக்சாண்ட்ரியா (Alexandria) நாட்டில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகத்தின்போது உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ கன்னியர்களில் ஒருவர் ஆவார்புராணங்களின்படிதுன்புறுத்தலின்போது அவருடைய பற்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டனஇதன்காரணமாக பல் மருத்துவம்பல் நோய்களால் துன்புறுவோர் மற்றும் இன்னபிற பல் பிரச்சினைகளால் துன்புருவோருக்கு இவர் பாதுகாவலராவார்.
கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படிபேரரசன் பிலிப் (Emperor Philip the Arab) ஆட்சியின் கடைசி ஆண்டில்ஒரு அலெக்சாண்ட்ரிய கவிஞர்அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான கலகங்கள் உச்சத்தை எட்டும் என்றும் நாடே இரத்தக்களரியாகும் என்றும் தீர்க்கதரிசனம் சொன்னார்அதன்படியே கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தனஅதனை ஆட்சியாளர்களாலேயே அடக்க இயலாமல் போனது.



அலெக்சான்ரியாவின் ஆயர் "டயோனிஸிஸ்" (Dionysius, Bishop of Alexandria) அந்தியோக்கியாவின் ஆயர் "பாபியசுக்கு" (Fabius, Bishop of Antioch) எழுதிய கடிதமொன்றில் தமது மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள்எவ்வாறெல்லாம் அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன என்பவற்றை விளக்கி எழுதியிருந்தார்பெண் திருத்தொண்டரான அபொல்லோனியாவை பிடித்து பெண்ணென்றும் பாராமல் அடித்து துன்புறுத்தினர்மீண்டும் மீண்டும் அடித்து அவரது பற்கள் முழுவதையும் உடைத்துப் பிடுங்கினர்அவரையும் இன்னும் பல கன்னியரையும் நகருக்கு வெளியே அமைத்திருந்த விறகுக் குவியலினருகே இழுத்துச் சென்றனர்விறகுக் குவியலுக்கு தீ மூட்டினர்அவர்கள் சொல்லும் தூஷண வார்த்தைகளை சொல்லச் சொல்லி வற்புறுத்தினர்கிறிஸ்துவுக்கு எதிராக வசை பேசவோ அல்லது அவர்களது தெய்வங்களை போற்றி பிரார்த்தனை செய்யவோ வற்புறுத்தினர்அல்லது உயிருடன் தீக்கிரையாக்குவதாக பயமுறுத்தினர்அபொல்லோனியாவின் வேண்டுதலுக்கிணங்க அவரை சிறிதே விடுவித்தனர்அபொல்லோனியா கண்ணிமைக்கும் நேரத்தில் கொளுந்து விட்டெரியும் தீக்குள் குதித்து உயிருடன் எரிந்து உயிர்விட்டார்.


About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top